பெங்களூரு விமான நிலையம் :: ரூ.7 கோடி மதிப்புள்ள கொகைன் பறிமுதல்.! கென்யா பெண் கைது - Seithipunal
Seithipunal


பெங்களூரு விமான நிலையத்தில் 7 கோடி மதிப்புள்ள கொகைனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு விமான நிலையத்தில் கொகைன் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து விமான பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில் முன்னுக்கு பின் முரணாக அவர் பதில் அளித்ததால், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தியதில் வயிற்று குடலில் மறைத்து வைத்து கொகைன் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, அவரிடம் இருந்து ரூபாய் 7 கோடி மதிப்புள்ள 650 கிராம் கொகைனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்தப் பெண்ணை கைது செய்து நடத்திய விசாரணையில், அவர் கென்யாவை சேர்ந்த சியேரா லிஒன் என்பதும், அவர் பலமுறை கொகைன் கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மேலும் அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 crore worth drugs seized in bangalore airport


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->