மிசோரமில் கல்குவாரி விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு.! 4 பேரை தேடும் பணி தீவிரம்.! - Seithipunal
Seithipunal


மிசோரமில் கல்குவாரி விபத்தில் சிக்கிம் 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு மிசோரமின் ஹனாதியால் மாவட்டத்தில் மவ்தார் பகுதியில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் நேற்று 13 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென குவாரியில் கற்கள் சரிந்து விழுந்துள்ளன. 

இதில் ஒரு தொழிலாளியில் தப்பி ஓடிய நிலையில், 12 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எல்லை பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் இவர்களுடன், இன்று காலை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு, இதுவரை விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உடல்களை மீட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து, காணாமல் போன 4 தொழிலாளர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 killed in Mizoram stone quarry accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->