லக்னோ || கனமழையால் ராணுவ வளாகத்தின் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


லக்னோவில் பெய்த கனமழையால் ராணுவ வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உத்திரபிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள தில்குஷா பகுதியில் அமைந்துள்ள ராணுவ வளாகத்திற்கு வெளியே ஏராமானோர் குடிசைகள் அமைத்து வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக ராணுவ வளாக சுவர் இடிந்து விழுந்ததில், சுவரை ஒட்டி குடிசையில் வசித்து வந்த 9 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 killed in army wall collapsed due to heavy rain in Lucknow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->