பிரபல விமான நிறுவனமான ஏர் இந்தியாவிற்கு அபராதம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர்.

இந்த நிலையில், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு விமான நிறுவனங்கள் வழக்கமாக வழங்கும் அறிக்கையின்போது ஏர் இந்தியா நிறுவனம் தகுதிபெறாத விமானிகளை கொண்டு விமானத்தை இயக்கியது தெரியவந்தது. 

உடனே, இந்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியாவிடம் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விளக்கம் கேட்ட நிலையில் விமானத்தை தகுதிபெறாத விமானிகளை கொண்டு இயக்கியது உறுதியானது. இதைத் தொடர்ந்து ஏர் இந்தியாவுக்கு 90 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.  

இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா விமான செயல் இயக்குநருக்கு 6 லட்ச ரூபாயும், விமான பயிற்சி இயக்குனருக்கு 3 லட்ச ரூபாயும் அபராதம் விதித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

90 lakhs fine to air india company


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->