பிரபல போஜ்புரி நடிகை ஹோட்டலில் தற்கொலை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
A famous Bhojpuri actress committed suicide in a hotel in uttar pradesh
பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே வாரணாசியில் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சாபூரில் பிறந்த அகன்ஷா துபே(25), முதன்முறையாக மேரி ஜங் மேரா பைஸ்லா என்ற படத்தின் மூலம் 17 வயதில் அறிமுகம் ஆனார். இவர் போஜ்புரியில் பிரபல நடிகர்களான கேசரி லால் யாதவ், பவன் சிங் மற்றும் பிரதீப் பாண்டே ஆகியோருடன் நடித்துள்ளார். மேலும் இவர் தனியாக 60 சூப்பர் ஹிட் இசை ஆல்பங்களையும் வெளியிட்டு உள்ளார்.
இந்நிலையில், வாரணாசி சாரநாத் பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் போஜ்புரி நடிகை அகன்ஷா துபே தூக்கு போட்டுக் கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அகன்ஷா துபேயின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் நேற்றிரவு பாடல் ஒன்றுக்கு செல்பி வடிவிலான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அகன்ஷா துபே, இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A famous Bhojpuri actress committed suicide in a hotel in uttar pradesh