திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற சிறுவனை தாக்கி காட்டுக்குள் இழுத்து சென்ற சிறுத்தை- அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பாதயாத்திரை சென்ற குழுவில் இருந்த சிறுவனை சிறுத்தை இழுத்துச் சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தின்மதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நடைபாதையாக வழியாக வரும் பக்தர்களுக்கு மட்டும் காத்திருக்காமல் விரைந்து தரிசனம் செய்யும் வசதியை தேவஸ்தானம் தரப்பில் செய்யப்பட்டு வருகிறது. 

இதனிடையே ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அடோனில் இருந்து பக்தர்கள் குழு ஒன்று ஏழுமலையானை தரிசிக்க அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு நேற்று இரவு புறப்பட்டு வந்துகொண்டிருந்தனர்.

இந்த குழு ஏழாவது மைல் அருகே வந்துகொண்டிருந்த போது உணவு சாப்பிட்டுள்ளனர். அந்த நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று சட்டென வந்து அந்த குழுவில் இருந்த கௌசிக் என்ற  4 வயது சிறுவன் தாக்கியது. இதனால் அந்த சிறுவன் அலறியுள்ளார். 

பிறகு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த சிறுவனனின் தலைமுடியை கவ்வி காட்டுக்குள் இழுத்து சென்றது.  இதை பார்த்து  அதிர்ச்சியடைந்த அந்த குழுவினர், உடனடியாக உள்ளூர் வியாபாரிகள் மற்றும் அருகில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் உதவியுடன் வனப்பகுதிக்குள் நுழைந்தனர். டார்ச்லைட், கற்களை வீசியும், ஒலி எழுப்பியும் சிறுவனை மீட்க முயன்றனர்.

பொதுமக்களின் செயல்களை கண்டு பயந்து போன சிறுத்தை வனப்பகுதியில் உள்ள போலீஸ் அவுட்போஸ்ட் பின்னால் சிறுவனை  விட்டுச் சென்றது. விரைந்து சென்று கௌசிக்கை மீட்ட பாதுகாப்பு படையினர் ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். 

சிறுத்தை தாக்கியதில் சிறுவனின் காது,  கழுத்தில் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பின் சிறுவன்  மேல் சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். திருப்பதி கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற சிறுவனை சிறுத்தை தாக்கி காட்டுக்குள் இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A leopard attacked a boy who went on a padayatra to Tirupati and dragged him into the forest a shocking incident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->