மேற்குவங்கத்தில் பரபரப்பு!...சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரியில் இருந்து நியூ ஜல்பைகுரி ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. தொடர்ந்து அந்த ரயில் இன்று காலை நியூ மைனகுரி ரயில் நிலையம் அருகே வந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டது.

இந்த ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்த அலிபுர்துவார் கோட்ட ரெயில்வே மேலாளர் உள்ளிட்ட ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இந்த விபத்தால் ரெயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டதால் ரெயில் சேவை பெரிதாக பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள ரயில்வே அதிகாரிகள்,  இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் ரயில் தடம் புரண்ட பகுதிகளில் போக்குவரத்தை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், தொடர்ந்து  இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக, அலிபுர்துவார் கோட்ட ரெயில்வே மேலாளர் அமர்ஜித் கவுதம் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A sensation in West Bengal6 coaches of a freight train derailed in an accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->