லாரி மீது வேன் மோதிய கோர விபத்து!...குஜராத்தில் குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் தனியார் வேன் லாரி மீது மோதிய கோர விபத்தில்  3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம், பரூச் மாவட்டத்தில் உள்ள மக்னாட் கிராமம் அருகே ஜம்புசார்-அமோத் சாலையின் இடது புறத்தில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் வேன் ஒன்று, லாரி  மீது மோதியது. இந்த கோர விபத்தில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் சந்தியா ஜாதவ், விவேக் கோஹில், கீர்த்தி கோஹில், ஜெய்தேவ் கோஹில், சரஸ்வதி கோஹில்,  ஹன்சா ஜாதவ் ஆகிய 6 பேர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் வேன் சிலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய கோர விபத்தில்  3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A tragic accident in which a van collided with a lorry 6 people including children died in gujarat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->