எங்க வீட்டிற்கு நல்ல வருகை தந்த புதிய உறுப்பினர்! கன்றுக்குட்டியுடன் விளையாடிய பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி வீட்டில் கன்றுக்குட்டியை தூக்கி கொஞ்சி விளையாடும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவரது வீட்டில் பசு ஒன்றை வளர்த்து வருகிறார். தற்போது அந்த பசு புதிதாக கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. 

இந்நிலையில், அந்த கன்றுக்குட்டியை கையில் எடுத்து மாலை அணிவித்து, சால்வை போர்த்தி, கொஞ்சி விளையாடிய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்திலும் வீடியோவாக எடுத்து அதில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

"இது நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது - காவ் சர்வசுக் பிரதா. லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதம மந்திரி வீட்டுக் குடும்பத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் சுபமாக நல்ல வருகை தந்துள்ளார். பிரதமரின் இல்லத்தில், அன்பிற்குரிய தாய் பசு, நெற்றியில் ஒளியின் அடையாளத்துடன் புதிய கன்று ஒன்றை ஈன்றுள்ளது. அதனால், அதற்கு 'தீப்ஜோதி' என்று பெயர் வைத்துள்ளேன்." 

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A welcome new member to our home Prime Minister Modi played with a calf


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->