வங்கியில் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் செலுத்தவோ, எடுக்கவோ ஆதார், பான் கட்டாயம்.!
Aadhaar and PAN are mandatory pay withdraw 20 lakhs bank
ஆண்டில் ரூ.20 லட்சம் அல்லது அதற்குமேல் தொகையை வங்கியில் செலுத்தவோ அல்லது வங்கியில் இருந்து எடுக்கவோ தங்கள் நிரந்தர கணக்கு எண் அல்லது ஆதார் எண்ணை வழங்குவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள விதிமுறைகளில் தெரிவித்துள்ளதாவது,
"1962 இல் திருத்தம் செய்வதற்கான விதிகளை உருவாக்கியுள்ளோம். இதில் விதி 114-ஐ திருத்தம் செய்யும் போது புதிதாக 114BA மற்றும் 114BB உட்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை வங்கியில் செலுத்தவோ அல்லது வங்கிகளில் இருந்து எடுக்கவோ அல்லது வங்கி மற்றும் தபால் அலுவலகத்தில் நடப்புக் கணக்கு அல்லது ரொக்கக் கடன் கணக்கைத் தொடங்குவதற்கோ நிரந்தர கணக்கு எண் அல்லது ஆதாரை வழங்குவது கட்டாயமாகும்". என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Aadhaar and PAN are mandatory pay withdraw 20 lakhs bank