வீட்டிலிருந்தபடியே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி.? - Seithipunal
Seithipunal


தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் போலி வாக்காளர் அட்டைகளில் ஏற்படும் மோசடிகளை தடுக்கலாம். அதன்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது பற்றி பார்க்கலாம்.

1. https://voterportal.eci.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று லாக் இன் செய்ய வேண்டும். 

2. மொபைலின் அல்லது அஞ்சல் அல்லது வாக்காளர் அட்டை எண்னை பதிவு செய்ய வேண்டும். 

3. எந்த மாநிலம், மாவட்டம், உங்கள் பெயர், பிறந்த தேதி, தந்தையின் பெயர் உள்ளிட்டவை பதிவு செய்ய வேண்டும். 

4. இந்த விவரங்களை பதிவு செய்த பின்பு தேடுதல் பட்டனை கிளிக் செய்து,  நீங்கள் பதிவிட்டு விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை திரையில் தெரிந்து கொள்ளவும்.

5. ஆதார் எண்ணை பதிவிடுங்கள் என்ற கட்டம் இடது பக்கத்தில் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். ஒரு சிறிய திரை உருவாகும். அதில் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள உங்கள் பெயர், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும். 

6.அனைத்து விவரங்களையும் சரியாக இணைத்தபின், அதை சரிபார்த்தபின் சமர்ப்பிக்கவும் (Submit) பட்டனை க்ளிக் செய்ய வேண்டு.ம் திரையில் உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் வரும். இந்த முறைகளின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aadhaar voter id link


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->