பேரம் பேசப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்: காவல் ஆணையரிடம் பாஜக பரபரப்பு புகாா்!
Aam Aadmi MLAs BJP complaint
புதுடெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் பேரம் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படும் விவகாரத்தில் விசாரணை நடத்த கோரி காவல் ஆணையரிடம் இன்று புகார் அளிக்க உள்ளதாக டெல்லி பா.ஜ.க தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லி பா.ஜ.க தலைவர் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க டெல்லி அரசை கவிழ்ப்பதற்காக சதி திட்டம் தீட்டுகிறது. இதுவரை ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் தொடர்பு கொண்டு தலா ரூ. 25 கோடி பேரம் பேசப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜரிவால் பொய்யான குற்றச்சாட்டை பாஜக மீது சுமத்தியுள்ளார்.
இந்த பொய்யான குற்றச்சாட்டின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாஜக பிரதிநிதிகள் குழு இன்று காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளிக்கப்பட்டு முழு விவரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்.
டெல்லி முதல்வர், நாளுக்கு நாள் அரசியல் கௌரவத்தை இழந்து வருவதோடு மட்டுமல்லாமல் ஊழலில் மூழ்கி விட்டார். பொய்யான குற்றச்சாட்டுகளின் பின்னணி தொடர்பாக விசாரணை நடத்த பாஜக பிரதிநிதிகள் காவல் ஆணையரை வலியுறுத்தும்.
ஆம் ஆத்மி கட்சியின் எந்தெந்த எம்எல்ஏக்கள் பாஜகவினரால் தொடர்பு கொள்ளப்பட்டார்கள். என்னென்ன சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது போன்ற தகவல்களை காவல்துறையினர் வாக்குமூலமாக பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Aam Aadmi MLAs BJP complaint