குஜராத் தேர்தலில் 35 தொகுதிகளில் ஆம் ஆத்மி 2வது இடம்..!! காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு..!! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநில பொதுத் தேர்தலில் பாஜக 156 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. குஜராத் மாநில வரலாற்றில் அதிகப்படியான தொகுதிகளை வென்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. குஜராத் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கடந்த முறை 77 தொகுதிகளை கைப்பற்றி இருந்த நிலையில் இந்த தேர்தலில் 17 தொகுதியை மட்டுமே வென்றுள்ளது. குஜராத் அரசியலில் புதிதாக களம் இறங்கிய ஆம் ஆத்மி கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இத்தகைய படுதோல்விக்கு காரணமாக அமைந்தது ஆம் ஆத்மி கட்சி. கடந்த தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியுள்ளது. நடந்து முடிந்த குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஏழு மணி நிலவரப்படி பாஜக 52.5% வாக்குகளை பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியாக திகழ்ந்த காங்கிரஸ் இந்த முறை 27.3% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. 

கடந்த 2017 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் போட்டியாக விளங்கியது. இந்த தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் வாக்குகளை அறுவடை செய்துள்ளது. குஜராத் தேர்தலில் முதன் முதலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி 12.9% வாக்குகளை பெற்றுள்ளது. குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி 35 தொகுதிகளில் காங்கிரசை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை தக்க வைத்துள்ளது. இதன் மூலம் தேசிய கட்சியாக ஆம் ஆத்மி கட்சி உருவெடுத்துள்ளது. ஆம் ஆத்மி பெற்ற வாக்குகளால் காங்கிரஸ் குஜராத்தில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aam Aadmi Party 2nd position in 35 seats in Gujarat elections


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->