பரபரக்கும் அரசியல் களம் - இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே ஆம் ஆத்மி கட்சி இரண்டு கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி இன்று மூன்றாவது மற்றும் கடைசி கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. 38 வேட்பாளர்கள் கொண்ட இந்தப் பட்டியலில் ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அதன் படி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியிலும், முதல்வர் அதிஷி கல்காஜி தொகுதியிலும், சவுரவ் பரத்வாஜ் கைலாஷ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இதேபோல், பா.ஜ.,வில் இருந்து விலகி இன்று மனைவியுடன் ஆம் ஆத்மியில் சேர்ந்த ரமேஷ் பெல்வான், கஸ்தூர்பா நகர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aam adhmi party announce last election candidate list for delhi assembly election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->