டெல்லி தேர்தல் : தொடர்ந்து முன்னிலை வகிக்கும் ஆம் ஆத்மி.! - Seithipunal
Seithipunal


கடந்த 4ஆம் தேதி இந்தியாவின் தலைநகர் டெல்லியில் மொத்தம் 250 மாநகராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அரவிந்த் கெஜிர்வால் மாநிலத்தின் முதல்வராக உள்ளதால் இவரது கட்சியான ஆம் ஆத்மி இந்த மாநகராட்சித் தேர்தலில் அதிக இடங்களைப் பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி  149 முதல் 171 இடங்களையும், பாஜக 69 முதல் 90 இடங்களையும் பெரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், மொத்தம் 250 வார்டுகளுக்கும் சேர்த்து 50% வாக்குகளே பதிவானதைத் தொடர்ந்து இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி 101 இடங்களிலும், பாஜக 89 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. 

இதற்கு, முன்பு கருத்துக் கணிப்புகளில் தெரிவித்தது போலவே, வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேலும், மிகவும் பலமாக இருந்து வந்த பாஜகவை இந்த முறை ஆம் ஆத்மி ஓரம் கட்ட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று கருத்து கணிப்புகள் கூறிவந்ததைப் போலவே, வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் உள்ளது. இதுவரை வெளியான தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் நிலவரத்தின் படி, ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aam athmi leading in delli corporation election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->