நடிகர் மாதவனுக்கு புதிய பதவி! மத்திய அமைச்சர் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (எஃப்டிஐஐ) தலைவராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் இயங்கி வருகிறது.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கீழ் இயங்கும் இந்த துறையில்,, நடிகர் மாதவன் நியமனம் குறித்த அறிவிப்பை அவரே வெளியிட்டு, தனது வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில், “இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நடிகர் மாதவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

உங்களின் கடுமையான உழைப்பும், தொழில்தர்மமும்,  அனுபவமும் இந்நிறுவனத்துக்கு பயன்படும் என்று உறுதியாக நம்புகிறேன். 

உங்களின் அனுபவம் வாய்ந்த முன்னெடுப்புகளால் இந்நிறுவனத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, நிறுவனத்தை மேலும் உயரத்துக்கு கொண்டு செல்லும்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Madhavan Posting in FDII


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->