#Breaking : வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க நடவடிக்கை-மத்திய அரசு.!
Adhar card link to voter list
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் கார்டு இணைக்கும் வகையில் கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு சட்டத்திருத்தம் நிறைவேற்றியது.
இந்தப் புதிய சட்ட திருத்தம் மூலமாக ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளராக பதிவு செய்வது தடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதுமட்டுமல்லாமல் 18 வயது நிரம்பியவுடன் வாக்காளராக பதிவு செய்யக்கூடிய வகையில் வருடத்திற்கு 4 கட்-ஆஃப் தேதிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் புதிய தேர்தல் சட்டத்தில் பாலின சமத்துவத்தை பின்பற்றக் கூடிய வகையில் மனைவி என்ற வார்த்தையை வாழ்க்கை துணை என்று குறிப்பிடலாம். அதன் மூலமாக தொலைதூர பகுதிகள் அல்லது வெளிநாடுகளில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் வாழ்க்கை துணை ஓட்டளிக்க வாய்ப்பு ஏற்படக்கூடும். இந்த சட்டத்திருத்தம் தற்போது அமலில் வந்துள்ளது. இந்த புதிய சட்டத் திருத்தம் தொடர்பாக 4 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக சட்ட மந்திரி கிரண் ரெஜுஜூ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Adhar card link to voter list