தீடீர் திருப்பம்! ஜோ பைடன் விலகல்! கமலா ஹாரிஷ் அதிபர் வேட்பாளர்? - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகியதை அடுத்து புதிய வேட்பாளராக கமலா ஹாரிஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் ஐந்தாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் ஆன ஜோ பைடன் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.

சமீபத்தில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டோனால்டு டிரம்ப் சமீபத்தில் மர்ம நபரால் துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு ஆளானார். அதிர்ஷ்டவசமாக  டிரம்ப் உயிர் தப்பினார். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் உலகம் நாடுகளில் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அதிபர் தேர்தலில் களம்காணும் ஜோ பைடனுக்கு அமோக வரவேற்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் ஜோ  பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனை எடுத்து தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார் அதிபர் ஜோ பைடன்.

ஜோ பைடனுக்கு அடிக்கடி உடல்நல குறைவு ஏற்படுவதை தொடர்ந்து அதிபர் தொகுதிகளில் போட்டியிட வேண்டாம் என்று ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பிரைடன் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் முன்மொழிவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

After Joe Biden withdrew from the US presidential election Kamala Harris was selected as the new candidate


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->