அதிக வயது கொண்ட ஆச்சர்ய பெண்புலி மரணம்.! எத்தனை வயது தெரியுமா.?!
Aged tiger Died In Delhi
அதிக வயது கொண்ட பெண் புலி வீணா ராணி உயிரிழந்துள்ளது.
டெல்லி உயிரியல் பூங்காவில் அதிக வயது கொண்ட வீனா ராணி என்ற பெண் புலி இருந்து வந்தது. இந்த வீணா ராணி எனும் பெண் புலி தனது 17 வயது வரை உயிருடன் இருந்தது.
வீணா ராணிக்கு ஈரல் பிரச்சனை ஏற்பட்டு அது அவதிப்பட்டு வந்தது. கடந்த சனிக்கிழமையிலிருந்து எந்த உணவையும் சாப்பிடாமல் இருந்து வந்த புலி நேற்று உயிரிழந்தது. சாதாரணமாக புலிகள் 12 முதல் 14 ஆண்டுகள் மட்டும்தான் உயிர் வாழும்.
அப்படிப்பட்ட நிலையில் வீணா ராணி தனது 17 வயது வரை உயிர் வாழ்ந்தது ஆச்சரியமானதாக பார்க்கப்பட்டது. இந்த பெண் புலிக்கு விஜய், திப்பு, சீதா என்ற மூன்று குட்டிகள் இருக்கின்றன.