அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல் வழக்கு.. 38 பேருக்கு தூக்கு தண்டனை.!! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 70 நிமிட இடைவெளியில் 21 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 56 பேர் உயிரிழந்தனர். 240 பேர் காயமடைந்தனர். 

மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கில் பொது வளாகங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த வழக்கில் 77 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 49 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் 26 பேர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்த விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ahmedabad blasts case judgment


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->