4000 மில்லியன் டாலர் செலவில் விமானங்களை புதுப்பிக்க ஏர் இந்தியா முடிவு.!
air india company spend four thousand dolars spend in renovation work
இந்தியாவில் சர்வதேச விமான சேவையை வழங்கும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது. இதையடுத்து, இந்த விமானங்களை புதுப்பிப்பதற்காக அதிலும் குறிப்பாக விமானத்தில் உள்ள கேபின்களை மாற்றியமைப்பதற்கு ஏர் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அந்தவகையில், விமானத்தில் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் வகையில்,அனைத்து வகுப்புகளிலும் நவீன முறையில் இருக்கை உள்ளிட்ட வசதிகளுடன் கேபின் உள்புற வடிமைப்புகள் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட உள்ளது.
இந்த புதுப்பித்தல் பணிகளை 4000 மில்லியன் டாலர் அதாவது சுமார் ரூ.3,200 கோடி செலவில் மேற்கொள்ளவதற்கு ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக லண்டனை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்றுடன் ஏர் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேம்பல் வில்சன் தெரிவித்துள்ளதாவது, "விகான்.ஏஐ திட்டத்தின் கீழ், உலகத் தரம் வாய்ந்த விமான நிறுவனத்திற்கு ஏற்ற தயாரிப்பு மற்றும் சேவைகள் மிக உயர்ந்த தரத்தை அடைய ஏர் இந்தியா உறுதி பூண்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
air india company spend four thousand dolars spend in renovation work