டெல்லியில் மிகவும் மோசம் அடைந்த காற்றின் தரம்!...3-வது நாளாக மக்கள் அவதி! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் கடந்த 2  நாட்களாக காற்று மாசு மிக மோசமான நிலைக்கு சென்றது. நேற்று முன்தினம் 334-ஆக இருந்த காற்று மாசு அளவு நேற்று காலை 9 மணியளவில் 428 ஆக அதிகரித்தது.

இதனால், டெல்லியில் உள்ள  இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமான ஓடுபாதையில் பார்வைத்திறன் பூஜ்ஜியமாக குறைந்தது. இதனால்  ஒரு சில விமானங்கள் தரையிறங்காமல் திருப்பி விடப்பட்டது.

மேலும், பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் மற்றும் பதான்கோட் விமான ஓடுபாதையில் காலை 5:30 மணிக்கு
பார்வைத்திறன் பூஜ்ஜியமாக குறைந்தது. இதே போல், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் விமான நிலையத்தில் இன்று காலை 7க்கு தெரிவுநிலை பூஜ்ஜியமாகக் குறைந்தது.

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் அடர்ந்த மூடுபனி நிலவியது. இதனால் மக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். மேலும் சில இடங்களில் புகை மூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட  பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில், 3-வது நாளாக இன்றும் கடுமயான காற்று மாசு நிலவுகிறது. மேலும்,  மிகவும் மோசமான நிலை அளவிற்கு காற்றின் தரக்குறியீடு   409 என்று பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Air quality in delhi has worsened people suffer for the 3rd day


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->