அம்பேத்கரின் கனவு நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்பு தேவை..! - அகிலேஷ் யாதவ்..!! - Seithipunal
Seithipunal


"அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு சாதிவாரி கணக்கெடுப்பு தேவை" என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்..!!

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ் பேசியதாவது "சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது சமாஜ்வாடி கட்சியின் புதிய கோரிக்கை கிடையாது. நாடு முழுவதும் சாமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன. சப்கா சாத், சப்கா விகாஸ் என்பது சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மட்டுமே சாத்தியமடையும்.

முதல்வர் வேறு ஒரு மாநிலத்தில் இருந்து வந்திருப்பதால் அவருக்கு சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சாதிவாரி கணக்கொடுப்புக்கு பின்பு தான் மக்கள் உரிய மரியாதையை பெறுவார்கள். இல்லையெனில் டாக்டர் அம்பேத்கரின் கனவு நிறைவடையாமலேயே போகும்" என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் போது 45 வயது பெண்மணியும் அவரது மகளும் தங்களுக்கு தாங்களே தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்ததது மிகவும் துரதிஷ்ரவசமானது என தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Akhilesh Yadav said caste wise census is needed to fulfill Ambedkar dream


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->