கேரளா படகு விபத்தால் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து.! - Seithipunal
Seithipunal


கேரளா படகு விபத்தால் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து.!

தற்போது கோடைகாலம் என்பதால் பொதுமக்கள் குளிர்ச்சியான இடத்திற்கு சுற்றுலா செல்ல ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலாத் தளங்களில் மக்கள் வரத்து அதிகரித்துள்ளது. 

அதன் படி நேற்று கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டம் தரூர் - பரப்பனங்காடி கடற்கரையில் உல்லாச படகு ஒன்று நாற்பதுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த படகு எதிர்பாராத விதமாக  கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட மொத்தம் 22 பேர் உயிரிழந்த நிலையில், எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் காணாமல் போயுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கேரளா மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

மேலும், இன்று கேரளா அரசின் அனைத்து நிகழ்வுகளும் ரத்து என்று கேரள தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தொடந்து விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

all government programs cancel for kerala boat accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->