ஆந்திராவிற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் - பிரதமர் மோடி உறுதி!
All help to Andhra Pradesh PM Modi assures
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது.
மேலும் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்து வருவதால், அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட இடர்பாடுகளில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், கனமழை பாதிப்புகள் குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது, நடைபெற்று வரும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து மோடியிடம் சந்திரபாபு நாயுடு விளக்கமளித்ததை தொடர்ந்து, நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்த கூடுதல் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், விசைப் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தேவை என்று மத்திய அரசிடம் சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டார். இந்நிலையில் மாநிலத்திற்குத் தேவையான உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட மத்திய அரசுத் துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.
English Summary
All help to Andhra Pradesh PM Modi assures