அம்பேத்கர் அவமதிப்பு விவகாரம்: அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு, தொடர் அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, அரசியல் சூழலை காய்ச்சி வருகிறது.

மாநிலங்களவையில் உரையாற்றிய அவர், “அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது பேஷனாகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்” என்றார்.

அம்பேத்கரை அவமதித்ததாகக் குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள், இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கின.

பா.ஜ.க. எம்.பி. ஜே.பி. நட்டா, ராகுல் காந்திக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வருவதாக அறிவித்தார். இதனால் இரு புறமும் கட்சிகள் கடுமையான சச்சரவை நடத்தின.

அம்பேத்கர் விவகாரத்தை மையமாக வைத்து தொடர் அமளி ஏற்பட்டதால், மக்களவையும் மாநிலங்களவையும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இரு அவைகள் நாளை காலை 11 மணிக்கு மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கரை அவமதிப்பது ஒருபோதும் ஏற்க முடியாது என எதிர்க்கட்சிகள் ஒருமித்த கோஷங்களை எழுப்பினர். இதனால், அடுத்தக் கூட்டத்திலும் பெரும் சர்ச்சை உருவாகும் வாய்ப்புள்ளது.

மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அமித்ஷா கருத்து விவகாரம் முக்கிய விவாதமாக மாறி, அரசியல் சூழ்நிலையை திகிலாக மாற்றியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ambedkar defamation issue Opposition to Amit Shah comment both houses of Parliament adjourned for the day due to continued violence


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->