நாமக்கல்லில் கொடூரம்! ஆன்லைன் ரம்மி, ரூ.50 லட்சம் இழப்பு: 11 மாத குழந்தைகளுடன் தாய் தற்கொலை? தலைமறைவான கணவன்! சிக்கிய கடிதம்! - Seithipunal
Seithipunal


நாமக்கல்லில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சம் இழந்ததால் விரக்தியடைந்த பெண், தனது இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், அவரது கணவர் மாயமானதால், இந்த மரணங்கள் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள பதிநகர் பகுதியில், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பிரேம்ராஜ் (வயது 38) தனது மனைவி மோகனப்பிரியா (வயது 33), மகள் பிரனதி (வயது 6) மற்றும் மகன் பிரனீஷ் (11 மாதம்) ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.  

இந்த நிலையில், இன்று மதியம் வரை வீட்டிலிருந்து யாரும் வெளியில் வராததை கவனித்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாக பார்த்தபோது, மோகனப்பிரியா மற்றும் இரு குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டனர். 

இதுகுறித்த தகவல் பெற்ற காவல் துறையினர் மூவரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

மேலும் விசாரணையில், பிரேம்ராஜ் ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சம் இழந்தது தெரியவந்துள்ளது. தன் இழப்பை வெளியே சொன்னால் அவமானம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் மாயமானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  

இந்த மரணங்கள் தற்கொலையா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Namakkal Mother and 2 child Mystery death


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->