இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை அம்பேத்கர் பிறந்ததினம்!
Ambedkars birth anniversary
'இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை'டாக்டர் திரு.பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் பிறந்ததினம்!.
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கும் அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (தற்போது மத்தியபிரதேசம்) என்ற இடத்தில் பிறந்தார்.
இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததால் பலமுறை துயரங்களை அனுபவித்தார். ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியர் இவர் மீது பாசமாக இருந்ததால் பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர் என்ற பெயரை, பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.

உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர். பிறகு 1923ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த பிறகு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா என்ற அமைப்பை நிறுவினார்.
1930ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கிய பி.ஆர்.அம்பேத்கர் தனது 65வது வயதில் 1956 டிசம்பர் 6 ஆம் தேதி அன்று மறைந்தார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
English Summary
Ambedkars birth anniversary