இந்தியர்களுக்கு அதிக விசா வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது - ஜான் பல்லார்ட் பேட்டி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க தூதரகம் வேலை, படிப்பு, சுற்றுலா மற்றும் வணிகம் என்று பல வகைகளில் விசாக்களை வழங்குகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு இந்தியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் விசாவுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு அமெரிக்க தூதரகம் முடிவு செய்துள்ளது. 

இதற்காக, கூடுதல் அதிகாரிகளை நியமித்தும், சனிக்கிழமைகளில் தூதரக அலுவலகங்களைத் திறந்தும் விசா ஒப்புதல் நடைமுறையை துரிதப்படுத்துவதற்கு  அமெரிக்கா முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக, மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகத் தலைவர் ஜான் பல்லார்ட் தெரிவித்ததாவது:- "இந்திய நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த ஆண்டு  எட்டு லட்சம் விசாவுக்கு ஒப்புதல் அளித்தது. 

இதில் கல்விக்காக மட்டும் 1.25 லட்சம் விசா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதை விட இன்னும் அதிக விசாக்கள் வழங்குவதற்கு ஒப்புதல் அளிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். 

அதேபோல், முதல் முறையாக பி1, பி2 சுற்றுலா மற்றும் தொழில்முறை பயண விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு காத்திருப்புக் காலம் குறைக்கப்படுகிறது. சமீபத்தில் இந்தியா நாட்டில் 2.5 லட்சம் பி1 மற்றும் பி2 விசாக்களை வெளியிட்டுள்ளோம். அத்துடன் விசா புதுப்பிப்பதற்கு இனி மக்கள் மின்னஞ்சல் வழியாக விண்ணப்பம் அனுப்பலாம். 

அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கான நடை முறையை எளிமைப்படுத்தும் குறிக்கோளில் விசா காத்திருப்புக் காலத்தை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america decision more visas provide to indians


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->