பிரதமருக்கே பாதுகாப்பு அளிக்க முடியாத காங்கிரஸ், சாதாரண மக்களை எப்படி பாதுகாக்கும்? அமித்ஷா கேள்வி.!
Amit Shah slams Congress
பிரதமருக்கே பாதுகாப்பு அளிக்க முடியாத காங்கிரஸ் கட்சி சாதாரண மக்களை எப்படி பாதுகாக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பி உள்ளார்.
ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்திற்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக பாஜக-வும் காங்கிரஸ் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பஞ்சாபின் லூதியான நகரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு அளிக்க முடியாத முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப் மாநில சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பார்? என கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் பதவியில் அமர சற்றும் தகுதியற்றவர் சரண்ஜித் சிங் சன்னி என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.மேலும் மக்களின் அடிப்படைத் தேவைகளை முழுவதுமாக அறிந்த கட்சி பாஜக தான் என்றும், அவர்களின் தேவைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என்றும், எனவே மக்கள் பாஜக-விற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் 14-ஆம் தேதி ஜலந்தரிலும், 16-ஆம் தேதி பதன்கோட் நகரிலும், 17-ஆம் தேதி அபோகர் நகரிலும் பிரசாரம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.