மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை: கொந்தளிக்கும் அமித்ஷா.! நடந்தது என்ன?
Amit Shah speech viral
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தெரிவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவர் பேசி இருப்பதாவது, இந்திய குடியுரிமையை உறுதி செய்வது நமது உரிமை. அதில் ஒருபோதும் சமரசம் கிடையாது.
சிஏஏ திட்டத்தை மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ளது. இது குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு செய்யப்படுவதால் இந்தச் சட்டத்தை திரும்ப பெரும் பேச்சுக்கே இடம் இல்லை.
சிஏஏ குறித்து கடந்த நான்கு ஆண்டுகளில் 41 முறை பேசியுள்ளேன். சட்டத்தால் சிறுபான்மையினரின் உரிமை பறிக்கப்படாது என்பது உறுதி.
சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தெரிவிக்க மாநில அரசுக்கு உரிமை கிடையாது. சட்டத்தை இயற்றுவதற்கும் அமல்படுத்துவதற்கும் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு.
தேர்தலுக்குப் பிறகு அனைத்து மாநிலங்களும் சட்டத்தை அமல்படுத்த ஒத்துழைப்பு தருவார்கள் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர், கேரள முதல்வர், டெல்லி முதல்வர் உள்ளிட்டோர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.