ஆஸ்திரியா நாட்டைச் சார்ந்த பெண்ணை இந்து கலாச்சார முறைப்படி மணமுடித்த இந்திய வாலிபர்! உற்சாகத்தில் ஊர் மக்கள்!
An Indian youth married an Austrian woman according to cultural norms
இந்தியாவின் நூர்பூர் நகரைச் சார்ந்த ரமேஷ் ராஜ் என்ற இளைஞர் ஆஸ்திரியா நாட்டைச் சார்ந்த பெண்ணை தனது சொந்த கிராமத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்து திருமணம் இந்து முறைப்படி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பங்கேற்ற கிராம மக்கள் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரை வாழ்த்தினர்.
இந்தியாவின் 100 பேருள்ள பஞ்சாரா பஞ்சாயத்து யூனியன் கீழ் வரும் கானோஹ் என்ற கிராமத்தில் வைத்து ரமேஷ் ராஜ் மற்றும் பிரிஜிட் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் மணப்பெண்ணின் தாய் கேப்ரியல் மற்றும் மணப்பெண்ணின் சகோதரர் ரோமன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தத் திருமணமானது இந்து கலாச்சார முறைப்படி நடைபெற்றது. மணப்பெண்ணின் தாய் மற்றும் சகோதரர் முன்னிலையில் மணமகன் ரமேஷ் ராஜ் மணப்பெண்ணிற்கு தாலி கட்டினார். இந்த நிகழ்வின்போது தம்பதியினர் இருவரும் இந்திய கலாச்சார முறைப்படி உடை அணிந்து இந்து சமய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். மேலும் திருமணத்தின் போது இருக்கும் ஒவ்வொரு சடங்குகளையும் மணப்பெண் பின்பற்றினார்.
ரமேஷ் ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் வசித்து வருவதாக ரமேஷ் ராஜின் தந்தை தேஸ் ராஜ் கவுண்டல் கூறினார். இவர்கள் வருடத்திற்கு ஒருமுறை தங்களது சொந்த கிராமத்திற்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆஸ்திரியாவின் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ரமேஷ் ராஜ் தனது நிறுவனத்தில் உடன் பணிபுரியும் பிரிஜிட் உடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்துள்ளதாக தெரிவித்தார்.
English Summary
An Indian youth married an Austrian woman according to cultural norms