170 கி.மீ. ஆன்மீக பாத யாத்திரையை நிறைவு செய்துள்ள ஆனந்த் அம்பானி..!
Anand Ambani has completed a 170 km spiritual walk
ஆனந்த் அம்பானி தமது 170 கி.மீ., ஆன்மீக பாத யாத்திரையை இன்று துவாரகாவில் நிறைவு செய்துள்ளார்.
உலக பெரும் கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி 18-வது இடத்தில் உள்ளார். ஆசியாவில் முதலிடத்தில் உள்ளார். இவர் ஆனந்த் அம்பானி. இவர் தமது 30-வது பிறந்த நாளை முன்னிட்டு குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இருந்து 170 கி.மீ., ஆன்மிக பாத யாத்திரை மேற்கொண்டார்.

ஜாம் நகரில் இருந்து துவாரகாதீஷ் கோவிலுக்கு செல்லும் வகையில் செல்ல திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், கடந்த மார்ச் 29-ஆம் தேதி தனது பாத யாத்திரையை ஆனந்த அம்பானி தொடங்கினார். அவரின் பயணம் இரவு நேரங்களில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் அம்பானியின் இந்த ஆன்மீக பாத யாத்திரை பயணம், இந்து நாட்காட்டியின் படி அவரது பிறந்த நாளான இன்று நிறைவு பெற்றுள்ளது. ராமநவமி நாளான இன்று (ஏப்ரல்-06) துவாரகாதீஷ் கோவிலுக்கு சென்று பயணத்தை பூர்த்தி செய்துள்ளார். அங்கு அவரது தாயார் நீடா அம்பானி, மனைவி ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர் ஆனந்த் அம்பானியை சந்தித்தனர்.
English Summary
Anand Ambani has completed a 170 km spiritual walk