தீ விபத்தில் சிக்கிய DyCM துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன்!
pawan kalyan fire accident Son Injured
சிங்கப்பூரில் அமைந்துள்ள பிரபலமான ஒரு தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பள்ளியில் ஆந்திர துணை முதல்வரும், பிரபல நடிகருமான பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் கல்வி பயின்று வருகிறார்.
தீ விபத்து நிகழ்ந்த நேரத்தில் பள்ளிக்குள்ளேயே இருந்த 8 வயதான மார்க் சங்கர் தீக்காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திலேயே விரைந்து சென்ற மீட்பு படையினர், அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தன் மகனின் நிலை குறித்து தகவல் அறிந்த பவன் கல்யாண், தனது அனைத்து அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளையும் தற்காலிகமாக ரத்து செய்து, சிங்கப்பூருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
pawan kalyan fire accident Son Injured