ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ஆடம்பர திருமணம்... எத்தனை கோடிகள் செலவு தெரியுமா?? - Seithipunal
Seithipunal


ரிலையன்ஸ் குழுமத் தலைவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணம் இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த திருமணத்திற்கு எத்தனை கொடிகள் செலவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

முகேஷ் அம்பானி - நீட்டா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் இருவரின் திருமண விழா கொண்டாட்டங்கள் கடந்த புதன்கிழமை மும்பையில் உள்ள அம்பானியின் இல்லமான ஆன்டிலியாவில் தொடங்கின. இதையடுத்து இன்று திருமண விழா மும்பையின் ஜியோ வேர்ல்ட் கன்வென்சன் சென்டரில் நடைபெற உள்ளது. 

முன்னதாக சங்கீத், ஹல்தி என்று களைகட்டிய விழாவில் சல்மான் கான், ஜான்வி கபூர், போனி கபூர், அனன்யா பாண்டே, சாரா அலிகான், உதித் நாராயண் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் திருமணத்திற்கு பாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சர்வதேச பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதில் ஷாருக்கான், கியாரா அத்வானி, அமிதாப் பச்சன், அமீர்கான், பிரியங்கா சோப்ரா, ரன்வீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் சாம்சங் தலைமை நிர்வாக அதிகாரி, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் உள்ளிட்ட சர்வதேச பிரமுகர்களுக்கு தனியார் ஜெட் விமானத்தை அம்பானி ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிகிறது. 

இந்நிலையில் இந்த திருமண கொண்டாட்டத்திற்கு ரூ. 4000 - ரூ. 5000 கோடிகள் வரை செலவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anant Ambani Radhika Merchant Wedding Cost Details


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->