அடேங்கப்பா..! ஆனந்த் அம்பானியின் கை கடிகாரத்தின் விலை இத்தனை கோடியா..?! வாய் பிளக்கும் நெட்டிசன்கள்..!! - Seithipunal
Seithipunal


ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் வரும் ஜூலை 12ம் தேதி மிகவும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமண விழா ஜூலை 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு முன்னதாக கடவுளின் ஆசீர்வாதம் வேண்டி ஹவானி என்ற விழாவை நடத்தி உள்ளார். 

இதற்காக ஆனந்த் அம்பானி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நெரல் பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணகாளி கோவிலுக்கு நேற்று சென்றுள்ளார் அப்போது அவர் அணிந்திருந்த கை கடிகாரம் தான் இன்று இணையத்தில் பேசு பொருளாக உள்ளது. 

உலக அளவில் மிக பிரபலமான நிறுவனமான ரிச்சர்ட் மில்லே நிறுவனத்தின் கை கடிகாரத்தை தான் அவர் அப்போது அணிந்திருந்தார். இந்த கடிகாரத்தின் மதிப்பு ரூ. 6.91 கோடி என்று தெரிய வந்துள்ளது. இந்த குறிப்பிட்ட வகையில் வெறும் 18 கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப் பட்டதாக ரிச்சர்ட் மில்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக ஆனந்த் அம்பானி குஜராத்தில் நடைபெற்ற தனது திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் ரூ. 18 கோடி மதிப்புள்ள கை கடிகாரத்தை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஆனந்த் அம்பானியிடம் உலக அளவில் மிக பிரபலமான பல்வேறு நிறுவனங்களின் விலை உயர்ந்த கை கடிகாரங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anant Ambani wears a Watch Worth Rs 6 Cr Photo Viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->