ஸ்டாலின், ஜெயலலிதா அமைச்சரவையில் இல்லாத பெருந்தன்மை - மாஸ் காட்டும் சந்திரபாபு நாயுடு! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேசத்தின் மாநிலத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு சற்று முன்பு பதவி ஏற்றுள்ளார். அவரின் அமைச்சரவை இடம் பெற்றுள்ள பெயர் பட்டியல் அவரின் பெருந்தன்மையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

ஆந்திரா மாநில சட்டமன்ற பொது தேர்தலை பொருத்தவரை சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சி தலைமையில் ஜனசேனா, பாஜக கூட்டணியில் இடம் பெற்றன. 

இந்த தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்ற தெலுங்கு தேசம் கட்சி, தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அதே சமயத்தில் ஜனசேனா கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது. 

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு தனது அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளான ஜனசேனா மற்றும் பாஜகவிற்கு இடம் அளித்துள்ளது.

மொத்தம் 24 அமைச்சர்கள் இன்னும் சற்று நேரத்தில் பதிவேற்க உள்ளனர். இந்த 24 அமைச்சர்களில் மூன்று பேர் ஜனசேன கட்சியை சேர்ந்தவர்களும், பாஜகவை சேர்ந்த ஒருவருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள தெலுங்கு தேசம், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டிய அவசியம், நிர்ப்பந்தம் எதுவுமே கிடையாது. இருப்பினும் சந்திரபாபு நாயுடு பெருந்தன்மையுடன் தனது கூட்டணி கட்சியை சேர்ந்தவருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்து, தனது பெருந்தன்மையை வெளிக்காட்டி உள்ளார். 

சந்திரபாபு நாயுடுவின் இந்த பெருந்தன்மையை தமிழக அரசியலோடு உற்று நோக்கினால், கடந்த 2011 சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக - தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றியை கண்டது. 

அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா தனது அமைச்சரவைகள் தேமுதிகவுக்கு இடம் கொடுக்கவில்லை. தனது கூட்டணி கட்சியான தேமுதிக எதிர்க்கட்சி தலைவர் பதவியுடன் அமர்த்தி, எதிர்க்கட்சியாகவே நடத்த தொடங்கியது அதிமுக.

இதேபோல், கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை கண்டது. திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதே சமயத்தில் தனது கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்காமல், தனது கூட்டணி கட்சி சேர்ந்த உறுப்பினர்களை எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தி தோழமையுடன் நடக்கும்படி பார்த்துக்கொள்கிறது.

ஆக ஜெயலலிதா மற்றும் ஸ்டாலினுக்கு இல்லாத பெருந்தன்மை சந்திரபாபுவுக்கு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra Pradesh TDP Chandrababu nayudu Cabinet


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->