ஆந்திரா | பவன் கல்யாணுக்கு பகிரங்க சவால் விடுத்த மகளிர் ஆணைய தலைவி! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் ஏராளமான இளம் பெண்கள் காணாமல் போனதாக ஜனசேனா கட்சி தலைவரும், திரைப்பட நடிகருமான பவன் கல்யாண் குற்றத்தை முன்வைத்தர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆந்திர மாநில மகளிர் ஆணைய தலைவி வாசி ரெட்டி பத்மா தெரிவிர்த்திருப்பதாவது, ''பெண்களை மதித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் இருவரும் பேசியதாக சரித்திரமே இல்லை.

காவல்துறை தலைமை இயக்குனர் தெளிவுபடுத்தி உள்ளதில், ஆந்திராவில் காணாமல் போன பெண்களில் 78 சதவீதம் பேர் மீட்கபட்டுள்ளனர். 

இது ஆந்திராவை தவிர வேறு எங்கும் நடக்கவில்லை என தெரிவித்த பவன் கல்யாண் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற10 மாநிலங்களை பற்றி பேச மறுப்பது ஏன்? மகளிர் காவல் நிலையங்கள் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது ஏன் அமைக்கவில்லை. 

மகளிர் ஆணையத்தை குறி வைத்து பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் பேசுவதை நிறுத்த வேண்டும். பவன் கல்யாணுக்கு நான் பகிரங்க சவால் விடுகிறேன். 

அவர் என்னுடன் பெண்கள் முன்னிலையில் விவாதத்திற்கு வர தயாரா? பவன் கல்யாண் நடித்த மோசமான படங்களால் இளம்பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்'' என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra Pradesh Women's Commission pawan kalyan misleading


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->