ஆந்திரா மாநிலத்தில் இன்று முதல் தலைநகர் இல்லை! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவின் பொதுத்தலைநகரமாக ஹைதராபாத் செயல்படுவதற்கு வழங்கப்பட்ட 10 ஆண்டுகாலம் நேற்றுடன் நிறைவடைந்தது. அதனால் ஆந்திரா மாநிலத்தில் தலைநகரம் குறித்த சிக்கல் எழுந்துள்ளது.

ஆந்திரா மாநிலத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி தெலுங்கானா மாநிலம் இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இவ்விரண்டு மாநிலங்களுக்கும் பொது தலைநகரமாக ஹைதராபாத் கலந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆந்திராவின் ஹைதராபாத் நகருக்குள் உள்ள லேக் வியூ அரசு விருந்தினர் மாளிகை உட்பட அனைத்து கட்டிடங்களையும் திரும்ப மீட்குமாறு தெலுங்கானா அரசு அதிகாரிகளுக்கு மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடந்த மாதம் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலத்துக்கு தலைநகர் குறித்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய தலை நகரத்தை கட்டமைப்பதற்காக வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் அவகாசம் நேற்று ஞாயிற்றுக்கிழமை உடன் நிறைவடைந்தது. ஆந்திரா மாநிலத்தின் இரண்டு கட்சியின் ஆட்சி மாற்ற முரண்பாடு காரணமாக அம் மாநிலத்தின் தலைநகர சிக்கல் இன்னும் தீர்க்கப்படாமல் தொடர்ந்து வருகிறது.

மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆந்திரா மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்களாக அமராவதி, கர்னூல், விசாகப்பட்டினம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பொது தலைநகரமாக ஹைதராபாத் செயல்படுவதற்கு வழங்கப்பட்ட 10 ஆண்டுகால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்ததால், ஆந்திரா  மாநிலத்துக்கு தலைநகர் குறித்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாளை நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள்  ஆந்திராவின் தலைநகர் குறித்த சிக்கலுக்கு தீர்வை அளிக்கும் என்று மக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra state has no capital since today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->