எதிர் கோஷம் எழுப்பியதால் ஆத்திரம்... பெண்களை ''சைத்தான்'' என தெரிவித்த வேட்பாளர்.! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, திருவூர் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிடும் கோலிகாபுடி சீனிவாஸ் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார். 

இந்நிலையில் சீனிவாஸ் பிரசார வாகனத்தில் நின்று கொண்டு தன் சின்னமான சைக்கிள், சைக்கிள் என மைக்கில் பேசியுள்ளார். 

அப்போது கீழே நின்று கொண்டிருந்த பெண்கள் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்ன மான 'ஃபேன்' என கோஷம் எழுப்பி உள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த சீனிவாஸ் அங்கிருந்த பெண்களைப் பார்த்து 'சைத்தான் சைத்தான்' என தெரிவித்துவிட்டு பிரசார வாகனத்தை வேற ஊருக்கு ஓட்டுமாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra Telugu Desam party candidate campaign issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->