ஆந்திரா | அவமானம் தாங்காமல் மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவர்!  - Seithipunal
Seithipunal


ஆந்திரா, நெல்லூரை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி அபர்ணா (வயது 35) இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அபர்ணா நேற்று முன்தினம் தனது கணவருடன் தலித்வாடா கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். 

அங்கு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பிரபு கலந்து கொண்டு நடனம் ஆடியபோது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்களுக்கும் பிரபுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். 

இந்த தகவல் பிரபுவின் மனைவி அபர்ணாவிற்கு தெரிய வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அபர்ணாவின் தாய் மகளுக்கு சாதகமாக பேசி உள்ளார். 

இந்நிலையில் பிரபு தான் அவமானப்பட்டதாக நினைத்து நினைத்து கொண்டு கணவன்-மனைவி இருவரும் வீட்டின் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது பிரபு அபர்ணா தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தார். 

இதில் அபர்ணா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அபர்ணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் போலீசார் வழக்கு பதித்து பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra wife murdered case husband arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->