செருப்பை ஊழியரிடம் கொடுத்துவிட்டு கடற்கரையில் ஆட்டம் போட்ட அமைச்சர் ரோஜா - வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் சமீபத்தில் திரையுலகை விட்டு சிறிது விலகி அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். 

அதன் படி, ஆந்திராவில் உள்ள நகரி சட்டசபைத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார். இந்த நிலையில், அமைச்சர் ரோஜா ஆந்திர மாநிலத்தில் உள்ள பாபட்லா சூர்யலங்கா கடற்கரைக்கு சென்றார். 

அங்கு அவர் கடல் நீரில் இறங்கி மகிழ்ச்சியுடன் கடற்கரை ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது அமைச்சர் ரோஜாவின் செருப்பை வேலைக்காரரின் கையில் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ, மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இந்த வீடியோவிற்கு பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. இதற்கிடையே, சூர்யா லங்காவின் சுற்றுலாத் தலத்த்திற்குச் சென்ற அமைச்சர் ரோஜா, சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். 

அப்போது அவர் பேசியதாவது, பாபட்லாவில் உள்ள சூர்யலங்கா கடற்கரை ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. அதனால், இந்த கடற்கரையை மேலும் விருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

 இதற்கான பணிகள் கூடிய விரைவில் ஆரம்பிக்கப்படும். விசாகப்பட்டினத்திற்கு அடுத்து மிக முக்கியமான கடற்கரையாக விளங்கும் சூர்யலங்கா கடற்கரைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வரவேண்டும் என்று பேசியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andira minister roja shoes on employee hand in suryalanga beach vedio viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->