மதுரை மக்களுக்கு மேலும் ஒரு அறிவிப்பு! டெல்லியில் அறிவித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!
Another announcement for the people of Madurai Finance Minister Palanivel Thiagarajan announced in Delhi
நெய்பர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நெய்மர் கோரியுள்ளார் நிதியமைச்சர்!
கடந்த முறை நடந்து முடிந்த ஜிஎஸ்டி கவுன்சில் திட்டத்தின் போது அடுத்த கூட்டம் மதுரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்த தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது "தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி மற்றும் அடுத்து நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பற்றியும் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தின் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களை பற்றியும் அதற்கான நிதியை பற்றியும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தேன்.
மேலும் சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ பணிக்கான ஆவணங்களில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் அதற்கான கடன் பெற முடியாத சூழ்நிலை உள்ளது அதை பற்றியும் விவாதித்தோம். இந்த மாதத்திற்குள் இது தொடர்பான கோப்புகளை முடிவு எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகளுக்கான வட்டி இல்லா கடன் ஒரு லட்சம் கோடி ரூபாய் திட்டத்தில் தமிழக அரசின் சார்பாக பல துறைகளில் இருந்து விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் 3500 கோடி ரூபாய் நேற்று மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த 3500 கோடி ரூபாய் ஆனது தமிழக ஊரக நெடுஞ்சாலை துறைக்காக மத்திய அரசு விடுவித்துள்ளது.
மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் அமைவதாக அறிவிக்கப்பட்ட நெய்பர் எனும் தேசிய மருந்துகள் ஆராய்ச்சி கழகம் இன்னும் அமையவில்லை என கேட்டேன். அதற்கு திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். அதற்கு பதிலாக நெய்மர் எனும் தேசிய மருத்துவ உபகரணங்கள் ஆராய்ச்சி கழகத்தை மதுரையில் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளேன். ஏற்கனவே மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் உடன் இந்த ஆராய்ச்சி கழகம் அமைந்தால் நன்றாக இருக்கும் என கேட்டுக் கொண்டுள்ளேன். அமைச்சரவை கூட்டத்தில் இதைப் பற்றி கலந்து ஆலோசிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்தார். இவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக நிதி அமைச்சர் பணிகள் தியாகராஜன் கூறினார்.
English Summary
Another announcement for the people of Madurai Finance Minister Palanivel Thiagarajan announced in Delhi