கேரளாவில் மேலும் ஒரு பலி!.... நிபா வைரஸ் எத்தனை நாட்கள் இருக்கும்?...சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 9-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்து 24 வயது வாலிபர் உயிரிழந்துள்ளதாகவும், அவருடன் நேரடி தொடர்பில் இருந்த 26 பேர் மஞ்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், உயிரிழந்த வாலிபர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படித்து வந்து உள்ளார். அங்கு அவருடன் தொடர்பில் இருந்த யாருக்காவது நோய் அறிகுறிகள் உள்ளதா என்பதை கண்டறியுமாறு அம்மாநில சுகாதாரத்துறை இயக்குனரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மனிதனின் உடலில் நிபா வைரஸ் நுழைந்தால் 21 நாட்கள் இருக்கும் என்றும், நோய் பாதித்து 9 நாட்கள் கடந்தால் மட்டுமே அறிகுறிகள் தென்படும் என்றும், அந்த நாட்கள் முக்கிய காலகட்டமாக கருதப்படும் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Another death in Kerala How many days will the Nipah virus last Health Minister explains


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->