பெண்களை பலாத்காரம் செய்த முன்னாள் தலைமைச் செயலாளர்.! முன்ஜாமினை ரத்து செய்த நீதிமன்றம்!
anthoman nikobar island Chief Secretary sexually harassment case bail cancel
ஜிதேந்திர நரேன் என்பவர் அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளராக பதவி வகித்தார். அப்போது அவர் தனது பதவிக் காலத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட பெண்களை தனது இல்லத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து அவர்களுக்கு வேலையும் வழங்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக 21 வயது பெண் ஒருவர் அளித்த புகாரில், "நரேன் மற்றும் தொழிலாளர் நல ஆணையர் ஆர்.எல். ரிஷி உள்ளிட்டோர் மீது கூட்டு பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் கடந்த மாதம்1-ந் தேதி, தலைமைச்செயலாளர் ஜிதேந்திர நரைன் மற்றும் தொழிலாளர் நல ஆணையர் ரிஷி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஓட்டல் அதிபர் மற்றும் போலீஸ் தலைமை காவலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த மாதம் 18-ந் தேதியன்று, அந்தமான் நிகோபார் உயர் போலீஸ் அதிகாரிகள் குழு, போர்ட் பிளேரில் உள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து நரேன் தனக்கு இடைக்கால ஜாமீன் வேண்டும் என்று, டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியதில், அங்கு அவருக்கு அக்டோபர் மாதம் 28-ந் தேதி வரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கூட்டு பலாத்கார வழக்கில் நரேனின் முன்ஜாமீன் மனுவை உள்ளூர் செஷன்ஸ் நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பு வெளியிட்டது. இந்த தீர்ப்பு வெளியான உடனேயே, ஒரு போலீஸ் குழு நரேனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது.
English Summary
anthoman nikobar island Chief Secretary sexually harassment case bail cancel