வேளாண் ஏற்றுமதியை 2356 கோடி டாலராக உயர்த்த திட்டம் - அபெடா - Seithipunal
Seithipunal


மத்திய அரசு தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கும், வேளாண் ஏற்றுமதியை கவரக்கூடிய தொழிலாக மாற்றுவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் 2022-23 நிதியாண்டில் வேளாண் ஏற்றுமதியை 23.56 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (அபெடா ) செயல் திட்டங்களை வகுத்துள்ளது.

இதன்படி, மின்னணு தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களின் உதவியுடன் சாத்தியமான தயாரிப்புகளின் பட்டியலை முன்னிலைப்படுத்தி ஏற்றுமதியாளர்கள், விவசாயிகள், உணவு பதப்படுத்துபவர்கள், அந்நிய செலாவணி மேலாண்மை நிறுவனங்கள் போன்றவற்றுடன் வலுவான மற்றும் வழக்கமான தொடர்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க முடியும். மேலும், ஏற்றுமதிக்கு சாத்தியமான தயாரிப்புகள் சமூக ஊடகத்திலும், அபெடா இணையதளத்திலும் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்ப பொருட்கள் வாரியாகவும், நாடுகள் வாரியாகவும் பிரிக்கப்பட்டு குறிப்பிடப்படும்.

மேலும் புவிசார் குறியீட்டு பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை வடகிழக்கு பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Apeda plans to increase agricultural export to 2356 crore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->