பேண்ட் பாக்கெட்டில் வெடித்து சிதறிய ஆப்பிள் ஐபோன் - பயனரின் நிலை என்ன?
apple i phone blast in uttar pradesh
தற்போதைய காலத்தில் அண்டிராயிடு செல்போன் பயன்பாடு அதிகளவில் உள்ளது. அதிலும் இளைஞர்கள் மத்தியில் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிக்கு கேரண்டி அளிப்பதால் ஆப்பிள் ஐபோன் அதிகம் வாங்கப்படுகிறது. இருப்பினும் இந்த செல்போனால் அதிக பக்க விளைவுகளும் ஏற்படுகிறது.

இந்த நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அலிகாரில் ஒரு நபரின் பாக்கெட்டிற்குள் ஆப்பிள் ஐபோன் 13 மாடல் வெடித்துச் சிதறியுள்ளது. இது குறித்து வெளியான வீடியோவில், செல்போன் வெடிப்புக்கு பிறகு கடுமையாக எரிந்து சேதமடைந்தது தெரிய வந்தது. பேன்ட் பாக்கெட்டில் இருந்தபோது ஏற்பட்ட வெடிப்பில் அந்த நபர் பலத்த காயமடைந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு வாங்கிய செல்போன் வெடித்து சிதறியதால், சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
apple i phone blast in uttar pradesh