நீட் தேர்வுக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும் - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு.!
apply neet exam from coming march 9
இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால், ஒவ்வொரு வருடமும் தேசிய தேர்வு முகாமை சார்பில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9ஆம் தேதி இரவு 9 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மே மாதம் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இந்தத் தேர்வு, 2017 முதல் தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக தமிழகத்தில் நடைபெறவுள்ளது.
English Summary
apply neet exam from coming march 9