டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் கைது செல்லும் - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Arvind Kejriwal CASE Delhi HC Judgement Supreme Court
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது செல்லும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி உயர்நநீதிமன்ற நீதிபதி ஸ்வரணா காந்த சர்மா வழங்கியுள்ள அந்த தீர்ப்பில், "குற்றம் சாட்டப்பட்டவரை அமலாக்கத்துறை கைது செய்ததை சட்டப்பூர்வமாக மட்டுமே அணுக முடியும், தேர்தல் நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற வாதத்தை ஏற்க முடியாது.
சாமானியர்களுக்கு ஒரு சட்டம், முதலமைச்சருக்கு ஒரு சட்டம் என இருவேறு நீதியை நீதிமன்றம் கடைபிடிக்க முடியாது. அரசியல் காரணங்களை நீதிமன்றத்தின்முன் வாதமாக முன்வைக்க முடியாது.
இந்த வழக்கு அமலாக்கத்துறை மற்றும் கெஜ்ரிவாலுக்கு இடையிலானதே தவிர, ஒன்றிய அரசுக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையிலான மோதல் அல்ல. அமலாக்கத்துறையிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. கைதை ரத்து செய்ய முடியாது" என்று அஞ்சாத தீர்ப்பில் நீதிபதி ஸ்வரணா காந்த சர்மா தெரிவித்துள்ளார்.
English Summary
Arvind Kejriwal CASE Delhi HC Judgement Supreme Court