அசாம் கனமழை எதிரொலி: தொடரும் உயிரிழப்பு... மீட்பு படையினர் தீவிரம்.!
Assam rain and landslide 5 dead
அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. அசாமில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
15 மாவட்டங்களில் 1.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அசாமில் வெள்ளப்பெருக்கு இன்னும் மோசமாகியுள்ளது.
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கை படி ஹைலகண்டி மாவட்டத்தில் நேற்று வெள்ள நீரில் மூழ்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அசாம், கரீம்கஞ்ச் படர்பூர் பகுதியில் தொடர் கனமழை காரணமாக நேற்றிரவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் மண்ணில் புதையோடு பரிதாபமாக உயிரிழந்த விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தேவையில்லாமல் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Assam rain and landslide 5 dead